Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, 3 October 2018

தாய் மொழியில் கையெழுத்திடுவோம்

நம் தாய் மொழி தமிழில் கையெழுத்து போடுவதற்கும் ஒரு விழா எடுக்கும் நிலைக்கு நாம் மொழியை விட்டு வெகு தூரம் சென்று விட்டோமா?
இந்த சிறுவனின் உரையை கவனமாக கேளுங்கள் உங்கள் உறவுகளிடமும் குழந்தைகளிடமும் பகிருங்கள்

தமிழிலேயே இனி கையொப்பம் இடுவேன் என்ற உறுதிமொழியை எடுங்கள்.  உங்கள் அலுவலகம், வங்கிக் கணக்கு மற்றும் அனைத்து விதமான நிகழ்வின் போதும் தமிழில் கையொப்பமிடுவேன் என்று உறுதி எடுத்து அதற்கான முயற்சிகளை இப்போதே துவங்குங்கள்.

வாழ்த்துகளுடன்





கருவெளி ராச.மகேந்திரன்

Friday, 10 August 2018

மு.க.

சட்டங்களும் நீதிகளும் மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப் பட்டவை தான்.  ஆகையால் அதனை அவன்/அவள் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.  யாரால் மாற்றப்படும் போது ஏற்றுக் கொள்ளப் படுகிறது, யார் மாற்றுகிறார்கள், யாருக்காக மாற்றுகிறார்கள், அதனை யார் யாரெல்லாம் ஏற்கிறார்கள்? இது போன்ற எண்ணிலடங்கா கேள்விகள் வாழ்க்கையை புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கின்றன.  அது யாருடைய வாழ்க்கை என்பதும் பெரும் கேள்வி தான்.

மெரினா போன்ற இடத்தில் யார் யாருக்கு இடம் கிடைக்கும்?


2018080701


அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
https://www.paypal.me/karuveli

Wednesday, 8 August 2018

இனியும் ஏனோ?

இருவர் உள்ளம் வெவ்வேறென்றறிந்த பின்னே இனியும் ஒன்றென்ற ஒத்திகை நாடகம் ஏனோ?
சந்தேகத்திற்கு இடமளிக்காமல் விளங்கிய பின்பும் இந்த ஒத்திகை நாடகம் ஏனோ?
2018080802


உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி...   திட்டமிட்டபடி அனைத்தும் சென்றதென்றால் அடுத்த மாதத்திலிருந்து இந்தாண்டில் 12 - இபுத்தகங்ள் வெளியிடுவதாய் திட்டமிட்டு இருந்த அனைத்து புத்தகங்களும் உங்களை வந்து சேரும். இதுவரை வெளியிட்ட ஆறு புத்தகங்களையும் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  வாசிக்க விரும்புவோர்... என்னை தொடர்பு கொள்ளலாம்.  அல்லது வரும் செப்டம்பர் 5 அன்று அதற்கான தகவல்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.



Tuesday, 7 August 2018

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நேற்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.  ஜெயலலிதா அவர்கள் இறந்த போது "அம்மா" என்ற தலைப்பில் எழுதிய வரிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இருக்கு.  கலைஞர் கலைஞரென்பதால் தானோ எனக்கு இத்தனை பாசம் வருகிறதோ? அதுவும் தெரியவில்லை.  இருந்தும் எழுதி வைத்துள்ளேன் கலைஞருக்கும் எனக்குமான எண்ணச் சிதறல்களை ஒவ்வொன்றாய் கொண்டு வந்து சேர்க்கிறேன்.  அவைகளில் சில இச்சமயத்தில் வெளியிட முடியாதவையும் கூட. 

இந்த வரிகளை உங்களுக்கு பிடித்த இசைவடிவத்தில் நீங்களே பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்..  நானும் பாடிக் கொண்டே தான் எழுந்தேன்.. இவ்வரிகளை பாடிக் கொண்டே தான் இன்று காலை எழுந்தேன்.

(முடிந்தால் இன்று இரவுக்குள் பாடி அனுப்பி வைக்கிறேன்.)

2018080801




























காற்றோடு காற்றாகிவிட்டார் கலைஞர்

இன்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.
2018080702

முத்தமிழை முன்னுக்கு நிறுத்தி
முறையாய் அதற்கென நீ செய்த
முயற்சிகள் யாவும்..
காற்றோடு காற்றாய் கலந்து
கலைஞன் உன் புகழ் பாடுமையா!

முப்பால் தந்த பொதுமறை கவிஞனை
எக்காலமும் யாவரும் நினைத்திருக்க
முக்கடல் கூடலில் வானுயர நிறுத்தி
தமிழுக்கும் தமிழருக்கும் நீ தந்த உயர்வு
காற்றோடு காற்றாய் கலந்து
மூச்சுக்காற்றாய் உன் புகழ் வாழ்விக்குமையா!

சமூக நீதிகளை சட்டமாக்கி
சட்டங்களை நிகழ்வாக்கி
சம உரிமையால் சமத்துவத்தை
இம்மண்ணில் பரவலாக்கி
நீ செய்த சாதனைகள்
காற்றோடு காற்றாய் கலந்து
சமூகப் போராளி உன் புகழ் பரப்புமையா!

காலம் உன் உடல்களை களவாடிட..
எக்காலமும் களவாட முடியா
உன் முத்தமிழ் படைப்புகள்
முடி சூடி இம்மண்ணில்
நெஞ்சோடு நிறைந்து
நெஞ்சுக்கு நீதியாய்
உன் புகழ் நிலைக்கச் செய்யுமையா!

============

– தனிப்பட்ட முறையில் கோபங்கள் பல இருந்தாலும் ஒப்பிட்டு அளவில் மட்டுமின்றி தமிழுக்காற்றிய தொண்டுக்காக பங்களிப்புக்காக அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கை அவருக்கு அருள வேண்டிக்கொள்கிறேன்.

கருவெளி ராச.மகேந்திரன்

Monday, 30 July 2018

என் கண்ணம்மா


இன்றோடு முடிந்தது அல்லது முடித்து வைக்கப்பட்டது இன்னொரு நெடும் பயணம்.

Monday, 29 May 2017

பாவம் அவள்

விட்டு விலகையிலும் பாவப்படும் மனம் அபூர்வமே!

இரசாயனப் பால்..

வாசகர் விருப்பப் பகுதிக்காக எழுதியது.. வாசகர் முத்துலட்சுமி பசுமைவிரும்பி

விசமில்லா விவசாயம்?

நேற்று (ஞாயிறு) மாலை 4 முதல் 6 மணி வரையில் இணைய வழியாக நடைபெற்ற "கருவெளியில் சில மணித்துளிகள்" முதல் முயற்சி என்றாலும் சில வாசகர்கள் தங்களுக்கு பிடித்த கருப்பொருள்களை / தலைப்புகளை பகிர்ந்து கொள்ள அதற்கான கவிதைகள் அவர்களுக்கு பகிர்ந்து கொள்ளப் பட்டது.   இந்த விளையாட்டு எனக்கு மீண்டும் கல்லூரி காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.
நேற்று சென்னையிலிருந்து திரு. பிரபு கேட்டிருந்த தலைப்புக்காக எழுதிய வரிகள் இதோ.. 


Tuesday, 14 March 2017

நிலவின் பயணம்

நிலவின் பயணத்தை, வரிகள் பிறப்பு பற்றி சில வரிகளுடன் ஆரம்பிக்கலாமே..

பல விசயங்கள் நம் கவனம் ஈர்ப்பதேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மிக முக்கியமான  காரணமாக,  நிகழ்வுகளையும் நம் மனநிலையையும் சொல்லலாம்.  இக்கவிதை பிறப்பதற்கான காரணமும் அவையே தான்.  முதல் இரண்டு வரிகள் தோன்றக் காரணமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீதி உலா வரும் போது விரைந்து பயணிக்கும் மேகங்களுக்கிடையே அந்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது தான்.   பிறகென்ன…  பிறந்து விட்டது நிலவின் பயணம்…  உடனுக்குடன் உங்களுக்காக…
மூன்று நாட்களும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நிலவுக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..  இது அவ்வளவு நல்லதல்ல!  இந்த கடைசி வரிகளுக்கான அர்த்தம் என்னைத் தவிர இந்த மண்ணில் இன்னொருவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் இக்கவிதையை வாசிப்பாரா? என்று எனக்குத் தெரியாது) . அவருக்காக (உங்களுக்காகவுந்தான்) “ இனி நான் என்ன செய்வேன்?”  என்ற தலைப்பில் கவிதையும் தயாராக உள்ளது.  ஆனால் வெளியிட மனமில்லை..


Monday, 13 March 2017

கவியோடு ஒரு பயணம்

அன்புடையீர்,




அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.   பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் "blogger.com"  ற்கு திரும்பி வந்திருக்கிறேன்.   இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு முக்கியக் காரணம் இருந்தாலும்.   எனது karuveli.blogspot.com ஜ மீட்டெடுக்க முடியாததால், புதிய பெயருடன் அல்லது எனது பெயரிலேயே  "karuvelirasamahendran" blog பிளாக்கை துவங்கியாயிற்று.  இனி  தொடர்ந்து பயணிப்போம்.  


அதன் துவக்கமாக  " கவியோடு ஒரு பயணம்" எனும் சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியின் மூலம்
கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள


அன்புடன் 
கருவெளி ராச.மகேந்திரன்