Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, 25 July 2018

யூடியூப் லைவ் – 5 செப்டம்பர் – 2018 – அடுத்த படைப்பு துவக்க அழைப்பு

அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.
இந்த இரு மாதங்கள் வெவ்வேறு பணிகளால் தினம் ஒரு கவிதைப் பகுதி சிறிது தொய்வடைந்து விட்டாலும் வரும் 5 செப்டம்பர் முதல் தொடர்ந்து பல படைப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  அன்றைய தினம் புதிய படைப்பையும் துவங்க உள்ளேன்.. அதைப் பற்றிய தகவல்களை யூடியூப் லைவ் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்பதனையும் இங்கே உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.  விரைவில் சந்திப்போம்..

உங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. 5 செப்டம்பர் 2018 காலை 10 மணிக்கு சந்திப்போம்..
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..  அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு..




அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

Saturday, 17 June 2017

நாலு சொல்லில் ஆடியோ புத்தகம் விரைவில்..

அன்புடையீர்,

வணக்கம்.



நாலு சொல்லில் புத்தகம் முப்பரிமாணம் எடுக்கிறது..  ஆம்..
எழுத்து வடிவில்...  இ-புத்தகமாக வரும் 23-ஜீன்-17 முதல் 30 - ஜீன் -17 ஆகிய தினங்களில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் : (ஆடியோ புத்தகமாக) 
புத்தகம் முழுமையும் ஆடியோவாக வெளியிடும் பணி நடந்து வருகிறது.  விரைவில், நீங்கள் ஒலி வடிவில் கேட்டு இரசிக்க உங்களுக்கு கிடைக்கும்.   இதோ... இந்த இணைப்பு அதற்கு உங்களுக்கு உதவும்..

நாலு சொல்லில் - ஒலிப்புத்தகம்

காணொளிகள் குறித்த விபரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்... 

அன்புடன்
ஆசிரியர்

Monday, 13 March 2017

கவியோடு ஒரு பயணம்

அன்புடையீர்,




அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.   பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் "blogger.com"  ற்கு திரும்பி வந்திருக்கிறேன்.   இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு முக்கியக் காரணம் இருந்தாலும்.   எனது karuveli.blogspot.com ஜ மீட்டெடுக்க முடியாததால், புதிய பெயருடன் அல்லது எனது பெயரிலேயே  "karuvelirasamahendran" blog பிளாக்கை துவங்கியாயிற்று.  இனி  தொடர்ந்து பயணிப்போம்.  


அதன் துவக்கமாக  " கவியோடு ஒரு பயணம்" எனும் சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியின் மூலம்
கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள


அன்புடன் 
கருவெளி ராச.மகேந்திரன்