Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Wednesday, 25 July 2018

யூடியூப் லைவ் – 5 செப்டம்பர் – 2018 – அடுத்த படைப்பு துவக்க அழைப்பு

அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.
இந்த இரு மாதங்கள் வெவ்வேறு பணிகளால் தினம் ஒரு கவிதைப் பகுதி சிறிது தொய்வடைந்து விட்டாலும் வரும் 5 செப்டம்பர் முதல் தொடர்ந்து பல படைப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  அன்றைய தினம் புதிய படைப்பையும் துவங்க உள்ளேன்.. அதைப் பற்றிய தகவல்களை யூடியூப் லைவ் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்பதனையும் இங்கே உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.  விரைவில் சந்திப்போம்..

உங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. 5 செப்டம்பர் 2018 காலை 10 மணிக்கு சந்திப்போம்..
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..  அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு..




அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

Tuesday, 26 June 2018

புரவலராக இணைய - “கருவெளி” படைப்புகளை பெற ஒரு வாய்ப்பு - தொடர்பாக

அன்புடையிர்,

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் உங்களுக்கு ஓர் நற்செய்தி, எனது படைப்புகளான கவிதைகள், கதைகள், பயண அனுபவங்கள், இசைக் கோர்வைகள் மற்றும் இதுவரை அலுவலக பணியில், களப்பணியில் கிட்டிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள பேட்ரியான்.காம் இல் புதிய பக்கத்தை துவங்கி உள்ளேன்.  இப்புதிய பயணத்தில் நீங்கள் என்னுடன் இணைந்து பயணிக்க, நீங்கள் புரவலராக இணைந்து கொள்ளலாம்.  சிறு காணொளியில் உள்ள தகவல் உங்களுக்கு இன்னும் உதவிகரமாக இருக்குமென நம்புகிறேன்.





உங்களுக்கான பேட்ரியான்.காம் பக்கத்தை உருவாக்க விரும்பினால் இந்த அழைப்பை பயன்படுத்தவும்.
https://patreon.com/invite/qjkwnx​

 

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எந்தெந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதனை மேலே கொடுத்துள்ள படத்தில் காணலாம்.

எனது இப்பணியில் நேரடியாக கலந்து கொள்ள விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

மாதாந்திர சந்தா போல் செலுத்தி நீங்கள் எனது படைப்புகளை பெற்றுக் கொள்ள இயலும்.  “கிரிடிட் கார்டு” மற்றும் “பே பால்” அக்கவுண்ட் மூலமாக நீங்கள் இத்தொகையை செலுத்த இயலும்.

“கிரிடிட் கார்டு” மற்றும் “பே பால்” அக்கவுண்ட் இல்லாதவர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும் (94455 28556)


குறிப்பு: இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது, இரண்டாவது இந்த வழிமுறை உங்களுக்கு இன்றோ, வருங்காலத்திலோ பயன்படக்கூடும்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்