Friday, 19 October 2018

நான் யார் தெரியுமா? #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.

என்னை அறியாதவர்களும், சமீப காலமாக அறிந்தவர்களும் என்னடா.. திடீர்னு தொடர்ந்து #MeToo Movement க்காக எழுதுகிறானே என்று நினைக்கக் கூடும். அப்படி நீங்கள் நினைத்திருந்தால் அது உங்கள் தவறொன்றும் இல்லை.  நான் எழுதுவதில் 5சதவீதத்திற்கும் குறைவான படைப்புகளையே பகிர்ந்து வருகிறேன்.  ஆகையால் அத்தகைய எண்ணம் தோன்றுவது நியாயமே.  

நாளை மறு நாள் வெளியிடவிருக்கும் "நிலவும் நீயும் நானும் - தொகுப்பு 2" மற்றும் இதற்கு முன்பு வெளியிட்ட படைப்புகளானாலும், இனி வெளிவரவிருக்கும் படைப்புகளானாலும் அவற்றுள் புதைந்து கிடக்கும் சமூக நீதியும் சம உரிமைக் குரல்களும்  மிக எளிதாக நாம் அனைவரும் கடந்து சென்ற நிகழ்வுகளை எழுத்துக்களில் பதிவாக்கி நம்மிடம் கேள்வி எழுப்பி, சிந்திக்கச் சொல்லி, செயலாற்றத் தூண்டுபவையாகவே இருக்கும்.    தேவை தான் அனைத்திற்கும் அச்சாணி என்றாலும் சமநிலையாக சுழலும் வாழ்க்கை சக்கரத்திற்கு அதை பயன்படுத்த நானும், நீங்களும் இந்த சமூகமும் கற்றறிந்திருக்கிறோமா? அந்தக் கேள்வி எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது, சமநிலை தேடும் சக்கரமாய்.

இதோ.. இன்னொரு கேள்வியுடன் இந்த வார்த்தைக் கோர்வைகள் நம் முன்னே
2018101901

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment