அன்புடையீர்,
அனைவருக்கும் நன்றி.. எண்ணமாய்,
புத்தகமாய், இயக்கமாய் பயணிக்கிறது நாலு சொல்லில். “நாலு சொல்லில்”
புத்தகம் ஒலி-ஒளி வடிவில் உங்களை வந்து சேருவதில் என்னைப் போல் வாசகர்களும்
பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் பேராதரவுடன் “நாலு சொல்லில்”
பலரையும் கவர்ந்திழுத்தது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அதன் தொடர்ச்சியாக, 1-சனவரி-18 முதல்
#100நாட்கள்100காணொளிகவிதை என்று தன் பயணத்தை தொடர்கிறது “நாலு சொல்லில்”.
ஏப்ரல் 10 வரை தொடர்ந்து இணைந்திருங்கள், பல்வேறு தலைப்புகள், வாசகர்
வரிகள் என அத்தனையும் உங்களை வந்தடைய காத்திருக்கின்றன. இந்த வெற்றியை 15
ஏப்ரல் அன்று கொண்டாடிடுவோம் நாம் அனைவரும்.
இதோ ஏழாம் வாரம் வெளியான காணொளிகள்
உங்களுக்காக.. இதோ 50 வது நாளை கடந்து பயணிக்கும் இந்த நொடியை
மீண்டுமொருமுறை நினைத்துப் பார்ப்பதோடு, இத்தருணத்தில் உங்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment